ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபராமாக ஆடிய இந்திய அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.
உலகக்கோப்பை முடிந்த கையுடன் தற்போது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மும்முரமாக விளையாடி வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதல் ரன் குவிக்க முடியாமல் திணறி வந்தது . ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய மறுபக்கம் ஸ்கோர் போர்டில் ரன் ஏறாமல் நின்றிருந்தது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுயுள்ளது.
4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.