“பிக்பாஸ்’ சீசன் 7” நிகழ்ச்சியில், 2 வீடுகள் இந்த முறை அறிமுகப்படுத்த உள்ள நிலையில்… 2வது வீட்டில், தங்க வைக்கப்படும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என கூறப்படும் நிலையில், இதுவரை பிக்பாஸ் தரப்பில் இருந்து மூன்று ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அதில் ஒரு புரோமோவில் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இரண்டு வீடுகள் இடம் பெற உள்ளதாக கமலஹாசனே ப்ரோமோவில் கூறியிருந்தார்.
இதனால், ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் வீட்டில் இரண்டு வீடு இடம்பெறுவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பி வந்தனர். அதிலும், குறிப்பாக பிக்பாஸ் இரண்டாவது வீட்டில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள்? என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், இது குறித்த ஒரு தகவல் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது.
அதாவது இந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்களை தவிர சில முன்னாள் போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், அவர்கள் பிக்பாஸ் இரண்டாவது வீட்டில் தங்க வைக்க பட உள்ளார்கம் என்றும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் இரண்டாவது வீட்டில் தங்க வைக்க பட உள்ள பிரபலங்கள் லிஸ்டில் ஓவியா, ஆரி, சாண்டி, அசிம் ஆகிய நான்கு பேரின் பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர முதல் நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படும் 18 போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த லிஸ்டில் கோவையைச் சேர்ந்த முதல் பெண் பஸ் ஓட்டுனரான ஷர்மிளா, நடிகை தர்ஷா குப்தா, நடிகர் அப்பாஸ், அம்மு அபிராமி, வி.ஜே.ரக்சன், நடிகையும் தொகுப்பாளினியுமான ஜாக்குலின், காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விக்னேஷ்,
பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர், மாடல் ரவிக்குமார், மாடல் நிலா, நடிகை ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகர் சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் பப்லு, அகில், சோனியா அகர்வால், விஜே பார்வதி ஆகியோர் தான் பங்கேற்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.