cancer symptoms | 30 வயதைக் கடந்த 1.21 லட்சம் பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 4,027 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோய் அறிகுறிகள்(cancer symptoms):
காரணமில்லாத உடல் எடை இழப்பு: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஒரு கட்டத்தில் உடல் எடையை இழக்கின்றனர்.
அடிக்கடி காய்ச்சல்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது.ஆனால் காய்ச்சல், ரத்தப் புற்றுநோய் (leukemia) அல்லது நிணநீர்க்குழியப் புற்றுநோய் (lymphoma) போன்ற புற்றுநோய்களில் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
தீவிரமான உடல் சோர்வு: ஓய்வெடுத்தாலும் தீராத தீவிரமான உடல் சோர்வும் ஒரு அறிகுறி.புற்றுநோய் பரவும்போது இது ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கலாம்.
தோலில் ஏற்படும் மாற்றங்கள் :தோல் புற்றுநோய்களுடன், வேறு சில புற்றுநோய்களும் வெளிப்படையாகத் தெரியும் தோல் மாற்றங்களை ஏற்படுத்தும்.
மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றங்கள்:மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது உங்கள் மலத்தின் அளவு நீண்ட காலமாக மாறுவது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இதையும் படிங்க: மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!
ஆறாத காயங்கள் :மச்சங்கள் — குறிப்பாக வளரும், வலி ஏற்படுத்தும், அல்லது இரத்தம் கசியும் மச்ச்சங்கள் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனால் நான்கு வாரங்களுக்கு மேல் குணமடையாத சிறிய காயங்கள் குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இரத்தப்போக்கு: புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படலாம்.
இருமும் போது இரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
உடலில் தடிப்பு அல்லது கட்டிகள் :பல புற்றுநோய்களை தோலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் உணர முடியும்.
இந்தப் புற்றுநோய்கள் முக்கியமாக மார்பகங்கள், விரை, நிணநீர் கணுக்கள் (சுரப்பிகள்) மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் ஏற்படுகின்றன.
விழுங்குவதில் சிரமம் :தொடர்ந்து அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய், வயிறு அல்லது குரல்வளை (தொண்டை) புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
தொடர் இருமல் அல்லது தொண்டை கரகரப்பு:தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.மூன்று வாரங்களுக்கு மேல் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.
தொண்டை கரகரப்பு குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பிப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1765303766583230923?s=20
இந்த நிலையில் தமிழகத்தில்30 வயதைக் கடந்த 1.21 லட்சம் பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 4,027 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 1.21 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 4,027 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை போன்றவை அதிகமுள்ள மாவட்டங்களில் புற்றுநோய் தாக்கம் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டது.
அதனால், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவேண்டி, மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் முதற்கட்டமாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்தது.
இத்திட்டத்தின் மூலம் 69,000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்தததில், 1,372 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறியும்,
52,000 பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 2,655 பேருக்கு அறிகுறியும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “தமிழகத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 69,000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்தததில், 1,372 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், 52,000 பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 2,655 பேருக்கு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.