தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு மத்திய அரசு GST நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பானி பூரி வியாபாரி ஒருவருக்கு, ஜிஎஸ்டி பதிவுக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய அரசு. பானி பூரி விற்பனையின் மூலம் அவரது ஆண்டு வருமானம் ரூபாய் 40 லட்சத்தை தாண்டுவதால், அதற்கான வர்த்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி பதிவை கட்டாயமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : காமுகன் காசிக்கு அதிகரிக்கும் தண்டனை – நீதிமன்றம் வெளியிட்ட புதிய தகவல்..!!
ஆன்லைன் பேமெண்ட் (RazorPay, PhonePe) மூலம் விற்பனையாளரின் பரிவர்த்தனைகளை கணக்கில் கொண்டு இந்த ஜிஎஸ்டி விதிக்கப்பட்ள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
இந்தியாவில் பானி பூரி விற்பனை செய்யும் வியாபாரிகள் நன்றாக சம்பாதித்து வருவதாக அவர்களே பல வீடியோக்களில் சொல்லி நாம் பார்த்திருப்போம் இந்நிலையில் தமிழ்நாட்டில் பானி பூரி வியாபாரி ஒருவர் ஆண்டுக்கு 40 லட்சத்துக்கும் மேல் சம்பாதித்து வந்திருப்பது தெரியவந்துள்ள நிலையில் தற்போது பலரும் இந்த தொழிலை கையில் எடுக்க முடிவு செய்து வருவதாகவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.