இந்திய ஜனநாயகத்தின் 4-ம் தூண் கோமாவில் உள்ளது என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் (mano thangaraj) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஒரு நாட்டின் ஜனநாயகம் எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை அளவிடும் காரணிகளில் முக்கியமானது பத்திரிக்கை சுதந்திரம். அதை பேணிக்காப்பது இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் கடமை.
தற்போது இந்தியா பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 176 நாடுகளில் 159-வது இடத்தில் உள்ளது. அதிலும் பாகிஸ்தானை விட இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல. இந்தியா ஆபத்தான நிலையில் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் . 2014-ல் மோடி பிரதமரான பிறகு பாஜகவும், பெருமுதலாளிகளின் நிறுவனங்களும் ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
Also Read : காலிஸ்தான் கனடா விவகாரம் குறித்து டாக்டர் ஜெய்ஷங்கர் பரபரப்பு தகவல்..!!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் 70-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களை வைத்துள்ளது.NDTV -யின் பங்குகளும் அதானி வசமாகி இருக்கின்றன. இதை வைத்து பார்த்தால் பத்திரிகை உலகின் பன்முகத்தன்மை அழிந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது?
மோடி அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தன்னாட்சி அமைப்புகள் மூலம் கடந்த 2018 முதல் 44 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈ.டி [15 முறை], ஐ.டி. [9 முறை], என்.ஐ.ஏ [20 முறை].
இணைய முடக்கம், தவறான தகவல்களை பரப்புதல், பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது, பத்திரிகையாளர்கள் கைது மற்றும் கொலை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் பத்திரிகை சுதந்திரக் ( mano thangaraj ) குறியீட்டில் இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.