திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 66,986 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து 5.05 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக திருப்பதி கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தினம் தோறும் திரளாக வந்து சாமி தரிசன செய்துவிட்டு செல்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் இக்கோவிலில் பணமாகவும் தங்கமாகவும் , வெள்ளியாகவும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
Also Read : லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்..!!
இக்கோவிலில் பிரதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுக்கு ஏராளமான பிரியர்கள் இருந்த நிலையில் லட்டு செய்ய முக்கிய பொருளாக இருக்கும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது கடந்த சில நாட்களாக சர்ச்சைகள் வெடித்து வருகிறது.
ஒரு பக்கம் சர்ச்சைகள் கிளம்பி அதற்கு பரிகார பூஜைகள் செய்து வந்தாலும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும் பக்கதர்கள் எண்ணிக்கை எப்போதும் போல் கணிசமாக உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 66,986 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து 5.05 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக திருப்பதி கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 26,163 பேர் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாகவும் செலுத்தியுள்ளனர்.