காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 5 பேர் கைது..!

Spread the love

பழநியில் காட்டுபன்றிகளை வேட்டையாடிவர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

பழநி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிகளவு உள்ளன. இவை அடிக்கடி உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவது வழக்கம்.

இந்நிலையில் ஓடைக்காடு பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாட படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பழநி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு காட்டுப்பன்றி வேட்டையாடிக் கொண்டிருந்த அழகாபுரியைச் சேர்ந்த கருப்புச்சாமி மகன் மாரிக்கண்ணு (31), பெரியகருப்பன் மகன் மாரிமுத்து (40), சின்னக்கன்னு மகன் மாரிமுத்து (18), புலிக்கோட்டையூரைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (50), நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அழகர் (60) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 16 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி, காட்டுப்பன்றியை பிடிக்க பயன்படுத்தும் வலை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் தலா ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கைது மற்றும் அபராதம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Spread the love
Related Posts