வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் மக்கள் கூட்டம் இருக்கும் பெரும்பாலான இடங்களில் சமீபகாலமாக போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதனை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளில் இரும்புக்கரம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் போதை பொருட்களின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை இன்னும் சொல்லப்போனால் போதை பொருட்களும் அதனை கடத்தி வந்து விற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் தான் இருந்து வருகிறது.
அந்தவகையில் தற்போது வேலூரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு கார், 4 பைக்குகள், 1,100 போதை மாத்திரைகள், ஆறு செல்போன்கள் , 5000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.