டி20 உலக கோப்பை வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடியபோது ஏற்பட்ட விபத்தில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் நாடே திருவிழா போல் கொண்டாடி வருகிறது . இந்நிலையில் இதனை மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்பவர் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார் .
Also Read : சூரியின் ‘கருடன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா..?
அப்போது பட்டாசு மீது டம்ப்ளரை வைத்து ஒரு வெடியை வெடித்துள்ளார். அப்போது டம்ப்ளர் வெடித்து சிதறியதில், அதன் துகள்கள் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த 5 வயது சிறுவனின் வயிற்றில் குத்தியுள்ளது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை தூக்கிக்கொண்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
டி20 உலக கோப்பை வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடியபோது ஏற்பட்ட விபத்தில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.