முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்திட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் (Ma Subramanian)அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி, புதிய முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன்,அரசு காப்பீட்டை ஆய்வு செய்திட முதலமைச்சர் அறிவுறுத்தல் படி முன்னாள் தேசிய சுகாதாரத்துறை முதன்மை இயக்குநர் சுந்தர்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் உறுப்பினர்களாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாநில திட்டகுழு உறுப்பினர் அமலோற்பவநாதன்,தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளாக ரேலா மருத்துவமனை தலைவர் முகமதுரேலா, காவேரி மருத்துவமனை இயக்குநர் அரவிந்தன் ஆகியோர் அடங்கிய 6 பேர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் ,கிண்டியில் உள்ள தமிழ்நாடு எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் 50 கோடி மதிப்பீட்டில் கருணாநிதி( Karunanidhi)பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும்அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
உலகில் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் பரவி வருகின்றது. இருப்பினும் இதுவரை தமிழகத்திற்கு மத்திய அரசு இடமிருந்து எந்த எச்சரிக்கையும் பெறப்படவில்லை என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பொது சுகாதார அமைப்பின் 100 ஆண்டுகளை கண்டுள்ளது அதனை முன்னிட்டு முதுநிலை மருத்து மாணவர்கள் 40 ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கியுள்ளனர், விரைவில் 100 ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய தமிழ் தொகுப்பு வழி காட்டி புத்தகமாக அனைத்து சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் வைக்கப்படும்.
பொது சுகாதாரத்துறையும்,எம்.ஜி ஆர் மருத்துவபல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது அதன்படி ஆராய்சியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு பொருளாதார உதவியும்,வழிகாட்டுதல்களையும் வழங்கும்
அரசு ,தனியார் உள்ளிட்ட 1779 மருத்துவமனைகளில் அரசு காப்பீடு திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர். 1கோடியே 42லட்சம் பேர் இத்திட்டத்தால் பயன் பெற்று இருக்கின்றனர் என்றார்.