500க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட நா.த.க நிர்வாகிகள் அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில நாட்களாக ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக விலகி வரும் நிலையில் தற்போது 500க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட நா.த.க நிர்வாகிகள் அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Also Read : அதிர்ச்சியில் தமிழ் திரையுலகினர் – பிரபல திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்..!!
கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாதக நிர்வாகிகள் கூறியதாவது :
கொடி நட்டு, மேடை அமைப்பதில் இருந்து கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்கிற எங்களை எச்சில் என்கிறார் அண்ணன் சீமான். புதிதாக வருபவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம் என அறிவித்துள்ளனர்.
தமிழக அரசியல் ஏற்கனவே பல பிரச்சனைகள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அக்கட்சியினரே கருத்து கூறி வருகின்றனர்.