சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வழித்தடம் வரை இன்று காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் வழித்தடத்தில் பல்வேறு தொழில்நுட்ப பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தாம்பரம் முதல் கடற்கரை வரை காலை 9.08 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை இயக்கப்படும் ரயில்களும், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணிவரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் நிறுத்தப்படுகிறது.
- செங்கல்பட்டு – சென்னை கடற்கரையிடையே காலை 11.00 மணிமுதல் மதியம் 2.20 மணிவரை இயக்கப்படும் ரயில்கள்
- செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே காலை 10 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படும்
- காஞ்சிபுரம் – சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படும்
- திருமால்பூர் – சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து. அதேபோல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே, காலை 10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.20 மற்றும் 12.40, மதியம் 1.45, பிற்பகல் 2.15 மற்றும் 2.30 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மின்சார ரயில் சேவை குறிப்பிட்ட நேரம் வரை ரத்து செய்யப்படும் நிலையில் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது எனவே இந்த வசதியை பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.