தெலுங்கானா – சத்தீஸ்கர் எல்லையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் தெலுங்கானா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அடிக்கடி மாவோயிஸ்டுகள் ஊடுவி வருகின்றனர். இதனால் அம் மாநிலங்களில் உள்ள பகுதிகளில் அடிக்கடி மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, தெலுங்கானா காவல்துறை, சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ காவல் படையினர் இணைந்து, தெலுங்கானா – சத்தீஸ்கரின் எல்லை பகுதியான கிறிஸ்தாராமில் இன்று காலை தேடுதல் வேட்டை நடத்தினர்.
காலை 7 மணி அளவில் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்த போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சண்டையில் சேர்லா பகுதியின் மாவோயிஸ்டு கமாண்டர் மது உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஆயுதங்களையும், பயங்கரமான வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் கண்காணிப்பாளர் சுனில் தத் தகவல் தெரிவித்துள்ளார்.