Site icon ITamilTv

அப்பா இந்த பாட்ட கண்டுபிடி! – 100 வயது தந்தைக்கு 75 மகனின் பாசமழை! – வைரலாகும் க்யூட் வீடியோ

Spread the love

100 வயதான தந்தைக்கு 70 வயதை கடந்த மகன் ஒருவர் பாட்டு பாடி உற்சாகப்படுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வளர்ந்து வரும் நவீன உலகில் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்களையும் விரல் நுனியில் கொண்டு வரும் வலையமைப்பாக சமூக வலைத்தளங்கள் மாறி வருகின்றன.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பல வீடியோக்களில் சில வீடியோக்கள் மட்டும் பலரில் மனங்களை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.

அந்த வீடியோவில் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் 100 வயதான தந்தைக்கு 70 வயதை கடந்த மகன் ஒருவர் பாட்டுப் பாடி உற்சாகப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மகன் விசில் மூலம் பாடலை பாடி அது என்ன பாடல் என கேட்க அந்த வயதிலும் அந்த பாடலை சரியாக கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Spread the love
Exit mobile version