70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
Also Read : பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த எஸ்.ஐ. கலைச்செல்வி மீது தாக்குதல்..!!
சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (கே.ஜி.எப் 2)
சிறந்த பின்னணிப் பாடகி – பாம்பே ஜெயஸ்ரீ (சாயும் வெயில் – சவுதி வெள்ளக்கா)
சிறந்த பின்னணிப் பாடகர் – அர்ஜித் சிங் (கேசரியா – பிரம்மாஸ்த்ரா)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஸ்ரீபத் (மல்லிகாபுரம்)
சிறந்த இயக்குனர் – சூரஜ் பர்ஜத்யா (உஞ்சாய்)
சிறந்த ஆவணப்படத்திற்கான விருது – ‘Murmurs of the Jungle’ (சோஹில் வைத்யா )
சிறந்த படம் – குல்மோஹர் (இந்தி )
சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 4 பிரிவுகளில் ‘பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது.