செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் சென்னை கிண்டி அருகே உள்ள 800 கோடி மதிப்புடைய ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை : கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ள சுமார் 800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் மீட்டெடுத்துள்ளனர்
இந்நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து இயங்கி வந்த, அரசுடைமை வங்கி, கிறிஸ்தவ மதப் பிரசார கூடம், வீடுகள் உள்பட 30 கட்டிடங்களுக்குச் வருவாய் துறை சீல் வைத்தனர்.
சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தையும் பட்டியலிடப்பட்டு ஒவ்வொன்றாக மீட்கும் நடவடிக்கையில் அம்மாவட்ட ஆட்சியர்களும் வருவாய் துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நிலம் மோசடி குறித்த புகார்கள் ஏதேனும் வந்தால் அந்த புகாரின் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு அம்மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.