81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிவு – வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் 81 கோடி இந்தியர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

கொரோனா பரிசோதனையின்போது அளித்த பெயர், தொலைப்பேசி எண், முகவரியுடன் கூடிய ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஹாக்கர்கள் குடி இருக்கும் டார்க் வெப்பில் கசிந்துள்ளன.

இதுவரை இல்லாத வகையில் ஹாக்கர்களால் திருடப்பட்டுள்ள இந்த இணைய கசிவு மிக பெரியது என்றும் இது தொடர்பாக சிபிஐ, தனது விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது .

தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் இதுபோன்ற சைபர் குற்றங்களும் அதிகரித்து வருவதால் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகளின் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts