அதிமுக ஒருங்கிணைப்பில் 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறிருப்பதாவது :
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக விரைவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன் . சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.
Also Read : முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதை நிறைவு செய்தது இஸ்ரோவின் ஆதித்யா எல் ஒன்..!!
ஜெயலலிதா ஆட்சியின் போது, அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். ஒரு பெண் முதலமைச்சர் என்பதால், அனைவரும் விமர்சனம் செய்தனர். ஆனால், இன்று அனைவருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படம் தேவைப்படுகிறது.
ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் மக்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது . தமிழக காவல்துறை தற்போது சரியாக செயல்படவில்லை என்பதற்கு தற்போது நடைபெறும் குற்றச்சம்பவங்களே சாட்சி என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.