கரூர் அருகே ஜீவா என்ற 19 வயது இளைஞர் முன்விரோதம் காரணமாக 7 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. 19 வயதான இவர் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் .
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி வெளியில் சென்ற ஜீவா திரும்பி வீட்டிற்கு வரவே இல்லை . இதையடுத்து ஜீவாவை அவரது குடும்பத்தினர் தேடி ஓய்ந்த நிலையில் கடைசியில் காவல் நிலையத்தில் புகைரளித்துள்ளனர் .
ஜீவா பெற்றோர் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிந்து அவரின் செல்போனை ஆய்வு செய்தனர். இதையடுத்து ஜீவாவிடம் கடைசியாக பேசிய சசிகுமார் உள்ளிட்ட நான்கு நபர்களை பிடித்து விசாரித்த போது அந்த நான்கு நபர்கள் மற்றும் சிலர் சேர்ந்து ஜீவாவை வெட்டிக்கொன்று தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலி இடத்தில் புதைத்து தெரியவந்தது.
இதையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் முன்பகை காரணமாக திட்டமிட்டு இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் . கொலையான ஜீவாவை 7 துண்டுகளாக வெட்டி புகைத்து எதுவும் தெரியாதது போல் இருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,