மன்னார்குடி அருகே கோவில் திருவிழாவுக்கு நண்பர்களுடன் சேர்ந்து பிளக்ஸ் போர்டு வைத்த போது மின்சாரம் பாய்ந்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்டை மாரியம்மன் கோவில் ஆனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணணிந்து செய்து வந்துள்ளனர் .
Also Read :கடலூரில் அதிமுக பிரமுகர் படுகொலை..!!
இந்நிலையில் கோவில் திருவிழாவுக்கு பிளக்ஸ் போர்டு வைக்க ஆசைப்பட்ட இளைஞர்கள் பிளக்ஸ் போர்டு அச்சடித்து அதனை மரத்தின் மீது தூக்கி காட்ட முயன்றுள்ளனர் . அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பி மீது பிளக்ஸ் பேனர் உரசி உள்ளது .
இதில் மதன்ராஜ் ( 15 ) மற்றும் ரூபன் (22) ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது . இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் இருவரையும் அங்கிருந்தவர்கள் தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் மதன்ராஜ் என்ற சிறுவன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . திருவிழாவுக்காக ஊர்மக்கள் அனைவரும் தாயாரான நிலையில் சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஊர் மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.