வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ( Bay of Bengal ) வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமானது. வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். புயலாக வலுவடைந்து பிறகு வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசம் நோக்கி நகரும்.
இதையடுத்து மே 26 ஆம் தேதி நள்ளிரவு வங்கதேசத்தின் சாகர் தீவு மற்றும் கேபபுரா இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை ( Bay of Bengal ) பெய்து வரும் நிலையில் தற்போது மேலும் இரு நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .