தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு “கலைஞர் சிலையாலேயே” உதயநிதி ஸ்டாலின் படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு, கலைஞர் கருணாநிதி உதயநிதியை வாழ்த்துவது போல், “கலைஞர் சிலையாலேயே” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வரைந்தார்.
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ஒரு சினிமா தயாரிப்பாளராகத் தொடங்கிய அவரின் பயணம், நடிகராக, கட்சித் தொண்டனாக, இளைஞரணிச் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக என நிதானமாகவே வளர்ச்சி கண்டது.
படிப்படியாக வளர்ந்து இப்போது துணை முதல்வரான பின் இன்னும் சுறுசுறுப்புடன் தமிழகத்தின் வளர்ச்சிப் பணிக்காக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
Also Read : நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் வழக்கு..!!
இந்நிலையில் துணை முதல்வரான பின் உதயநிதியின் முதல் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஓவிய ஆசிரியர் செல்வம் பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல் கலைஞர் சிலையை நீர் வண்ணத்தில் தொட்டு கலைஞர் கருணாநிதி துணை முதல்வர் உதயநிதியை வாழ்த்துவது போல், “கலைஞர் சிலையாலேயே” எட்டு நிமிடங்களில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வரைந்துள்ளார் .
இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் ஓவிய ஆசிரியர் செல்வத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர் .