சீன நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களை நெருப்பை விழுங்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று ஊழியர்களின் பயத்தை எதிர்கொள்ளவும், தன்னம்பிக்கையை பெருக்குவதற்கான பயிற்சியாகவும், தங்களது ஊழியர்களை நெருப்பை விழுங்க வைத்துள்ளது .
Also Read : ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு – தண்டனையின்றி விடுதலை செய்யப்பட்ட ட்ரம்ப்..!!
பஞ்சில் நெருப்பை பற்ற வைத்து அதை விழுங்கும்படி ஊழியர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த் மோசமான கட்டளையை வேறு வழியின்றி நிறைவேற்றியதாகவும் கூறப்டுகிறது.
அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரான ரோன்ராங், சமூகவலைதளத்தில் இது குறித்து ஆதங்கமாக பதிவிட்டு வேதனை தெரிவித்துள்ளார் . தன்னை போலவே நிறுவனத்தின் இந்த கட்டளையை செய்யாவிட்டால் வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் பலரும் இதை செய்ததாகவும் ரோன்ராங் வேதனை தெரிவித்துள்ளார்.