110 நாட்கள் சாப்பிடாமல் சாதித்த சிறுமி..!!

மும்பையில் தொடர்ந்து 110 நாட்களாக எந்த வித உணவும் எடுத்துக்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

மக்கள் கூட்டம் அலைமோதும் மும்பையில் கண்டிவாலி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரிஷா . எதையாவது சாதிக்க துடிக்கும் இந்த இளம் வயதில் அடிக்கடி சாப்பிடாமல் இருக்கும் தனது கட்ட பழக்கத்தை தற்போது சாதனையாக மாற்றியுள்ளார் .

சுமார் 110 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த சிறுமி கிரிஷா இப்படியொரு வித்தியாச சாதனையை படைத்துள்ளார் . சாதனைக்காக பட்டினி கிடந்த இந்த உண்ணாவிரதத்தின்போது வெறும் சுடு தண்ணீர் மட்டுமே குடித்து கிரிஷா உயிர் வாழ்ந்துள்ளார்.

முதலில் 16 நாட்கள் மட்டுமே விரதம் இருக்க திட்டமிட்ட இவர், தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத காரணத்தால், 26, 31, 51 நாள் என படிப்படியாக தனது இலக்கை விரிவாக்கி, இறுதியாக 110 நாட்கள் வரை தாக்கு பிடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

Total
0
Shares
Related Posts