Site icon ITamilTv

14 கோடி மைல் தூரத்தில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல் – நாசா கொடுத்த சுவாரஸ்ய தகவல்..!!

signal

signal

Spread the love

விண்வெளியில் 14 கோடி மைல் தூரத்திற்கு அப்பால் இருந்து லேசர் சிக்னல் ( signal ) ஒன்று பூமிக்கு வந்துள்ளதாக நாசா கூறியுள்ளது.

விண்வெளியில் பூமியை தவிர்த்து வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பால்வழி அண்டத்தை கடந்த பயணம் அங்கு வாழும் உயிரினங்கள் குறித்து அமெரிக்காவின் நாசா ஆய்வு செய்து வருகிறது. இதற்காக ‛சைக்கி’ என்ற விண்கலத்தை கடந்த 2023ல் விண்ணில் செலுத்திய நாசா அதனை, செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே நிலை நிறுத்தி உள்ளது.

லேசர் தகவல் பரிமாற்றத்தை ஆய்வு செய்வதே இதன் முக்கிய பணியாக உள்ளது. இந்த விண்கலமானது ‛டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேசன்ஸ்(டிஎஸ்ஓசி)‛ அமைப்பு பொருத்தப்பட்டு உள்ளது.

Also Read : சென்னையில் வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு..!!

இதன் மூலம் விண்வெளியில் நீண்ட தொலைவிற்கு லேசர் தகவல் தொடர்புகளை சாத்தியமாக்க முடியும். ரேடியோ அலைவரிசை தகவல் பரிமாற்றத்தை முதலில் இந்த விண்கலம் பயன்படுத்தினாலும், ஆப்டிகல் கம்யூனிகேசன்ஸ் தொழில்நுட்பத்தையும் இதில் உள்ளது.

இந்நிலையில், குறிப்பிடத்தக்க சாதனையாக இந்த லேசர் தகவல்தொடர்பு மூலம் 14 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து தகவல்கள் , ‛சைக்கி’யின் ரேடியோ அலைவரிசை டிரான்ஸ்மிட்டருடன் தகவல் பரிமாற்றம் செய்த பிறகு, அதில் உள்ள டிஎஸ்ஓசி மூலம் பூமிக்கு அனுப்பி வைத்தது. இதனை எட்டு நிமிடங்களில் பதிவிறக்கம் செய்ததாக, இதன் திட்ட இயக்குநர் மீரா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஏராளமான சாதனைகளை செய்துள்ள நாசா தற்போது விண்வெளியில் ( signal ) தனது ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த தகவல் மிக பெரிய சாதனையாக கருதுபடுவதாக நாசா தெரிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version