தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது .
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது 2 நாட்களில் தமிழகம், இலங்கையை நோக்கி நகரும்.
இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துக்கப்பட்டுள்ளது.