மகாராஷ்டிராவில்(maharashtra) மோடிக்கு வாக்களித்த விரலை வெட்டி, மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உல்ஹாஸ்நகர் பகுதியில் நந்தகுமார் நானாவரே தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு தனஞ்சய் 43 என்ற சகோதரர் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நந்தகுமார் தனது மனைவியுடன் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.முன்னதாக நந்தகுமார் நானவரே தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.
அதில், சதாரா மாவட்டம் பல்டான் தாலுகாவைச் சேர்ந்த சங்ராம் நிகால்ஜே, ரஞ்சித்சிங் நாயக் நிம்பல்கர், வழக்கறிஞர் தியானேஷ்வர் தேஷ்முக், நிதின் தேஷ்முக் ஆகியோர் தான் காரணம் என்று கூறி விரக்தியில் வீட்டு மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருக்கிறனர்.ஆனால் 1 மாதம் ஆகியும் இதுவரை இந்த வழக்கில் இந்த வழக்கில் யாரும் கைது செய்யபடவில்லை என கூறப்படுகிறது.
இதனால்ஆத்திரமடைந்த தனஞ்சய், மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு பரிசாக அனுப்புவதாகவும் தனஞ்சய் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.