ITamilTv

உதயநிதியின் மாமன்னன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்..! பதற்றத்தில் படக்குழு…

Spread the love

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் தான் மாமன்னன். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உதயநிதி மற்றும் கிருத்திகா உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது .

இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி ஓ.டி.எஸ். பிலிம்ஸ் உரிமையாளர் ராமசரவணன் வழக்கு தொடர்ந்துள்ளார் . தனது தயாரிப்பில் உருவாக இருந்த ‘ஏஞ்சல்’ படத்தை முடித்து கொடுக்காமல் மாமன்னன் படத்தை வெளியிடக் கூடாது என ஓ.டி.எஸ். பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது .

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாமன்னன் திரைப்படம் சொன்ன தேதியின்படி வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .


Spread the love
Exit mobile version