ITamilTv

11 வயது சிறுவனின் காலில் நுழைந்த ஒட்டுண்ணி… உயிரைப் பறித்த பரிதாபம்..!

Spread the love

அமெரிக்காவில், 11 வயது சிறுவனுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அரியவகை தசை உண்ணும் ஒட்டுண்ணியால் (parasite) பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விசாரணையில், Tread Mill-லிருந்து கால் இடறி விழுந்த சிறுவன் ஜெஸ்ஸி பிரவுனுக்கு கணுக்காலில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் சிறுவனின் கால் ஊதா நிறத்தில் மாறத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சிறுவன் ஜெஸ்ஸி பிரவுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், சிறுவனின் காலுக்குள் சதை பகுதிகள் மாயமாகி ‘நெக்ரோடைசிங் ஃபாசிட்டிஸ்’ (necrotizing fasciitis) என்ற தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

parasite

‘நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்’ என்பது ஒரு அரிதான பாக்டீரியா தொற்று ஆகும், இது உடலில் விரைவாக பரவுகிறது. மேலும், மரணத்தையும் ஏற்படுத்தும்.

இதனை, துல்லியமான நோயறிதல், விரைவான ஆண்டிபயாடிக் சிகிச்சை மற்றும் உடனடி அறுவை சிகிச்சை ஆகியவை மூலம் இந்த தொற்றுநோயை நிறுத்த வேண்டும்.

இந்நிலையில், இந்த ஒட்டுண்ணி சிறுவனின் கணுக்காலில் சிராய்ப்பு ஏற்பட்ட தோல் பகுதி வழியாக குரூப்-ஏ Streptococcus பேக்டீரியா ஊடுருவி, அசுர வேகத்தில் சிறுவனனின் தசைகளை உண்டுள்ளன.

இந்நிலையில், ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஜெஸ்ஸி பிரவுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்த வகை ஒட்டுண்ணிகளால் (parasite) பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்த பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசினால் உடனடியாக மருத்துவரை அனுகுமாறு அறிவுறுத்துகின்றனர்.


Spread the love
Exit mobile version