மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை. ஒன்றிய அரசை தற்காத்துக் கொள்ளும் அரசியல் பட்ஜெட் என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிற்ப்பதாவது :
இது வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை. ஒன்றிய அரசை தற்காத்துக் கொள்ளும் அரசியல் பட்ஜெட்.
பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அசாம், இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் வெள்ள தடுப்பு பணிகளுக்காக 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை குறை கூறவில்லை.
Also Read : மின்கட்டணம் உயர்வுக்கு காரணமே அதிமுக தான் – அமைச்சர் தங்கம் தென்னரசு
ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு வெள்ளத்தால் இதே அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு ஏன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை? என்ற கேள்வி எழுகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அடுத்த சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கென சிறப்பு திட்டங்கள் ஏதுமில்லை.
ஏற்கனவே கடந்த கால பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாத நிலையில், இந்த புதிய பட்ஜெட் எதை சாதிக்கப் போகிறது? என்கிற கேள்வி எழுகிறது என தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.