புனேவை அச்சுறுத்திவந்த குய்லின்-பார் சிண்ட்ரோம் என அரியவகை நோய்க்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 100-க்கும் மேற்பட்டோருக்கு அரிய வகை நரம்பியல் நோயான குய்லின்-பார் சிண்ட்ரோம் பதிவாகியுள்ளது.
Also Read : மோகன்லாலின் லூசிஃபர் 2-வின் டீஸர் வெளியானது – படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா..?
இந்த நோய் பாதித்தவர்களுக்கு உணர்வின்மை, தலை பலவீனம் போன்ற அறிகுறிகளும், தீவிரமாகும் போது பக்கவாதத்தை உண்டாக்கலாம் என்றும் இதுகுறித்த ஆராச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புனேவில் இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த பாதிப்பால் சிகிச்சையில் உள்ளவர்களை தற்போது தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.