‘விடாமுயற்சி’ படக்குழுவினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் – நடிகர் அஜித் புதிய முயற்சி

‘விடாமுயற்சி’ படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க, சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்துமாறு நடிகர் அஜித் பட நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்க உள்ளார் .

கடந்த சில மாதங்களாக இப்படத்தின் ப்ரீ பிரொடக்‌ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை ஹாலிவுட் தரத்தில் தயாரிக்க படக்குழு முடிவு செய்திருப்பதால் மொத்த படப்பிடிப்பையும் அஜர்பைஜான் நாட்டிலேயே எடுத்து முடிக்கும் பணியில் தற்போது படுக்குழு செயல்பட்டு வருகிறது .

இந்நிலையில் இப்படத்தின் கலை இயக்குநராக ஒப்பந்தமான மிலன் அப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவுடன் அஸர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்தார் .படப்பிடிப்பின் வேலைகள் அங்கு தீவிரமாக சென்றுகொண்டிற்குந்த நிலையில், ஓய்வுக்காக விடுதியில் தங்கிருந்த மிலன் தீடீரென மாரடைப்பு உயிரிழந்தார் .

இதனால் இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு நடிகர் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

‘விடாமுயற்சி’ படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க, சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்துமாறு நடிகர் அஜித் பட நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் . இனி மிலன் போன்ற எந்த ஒரு திறமையான கலைஞர்கள் உயிரிழக்க கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி என்றும் கூறப்படுகிறது.

Total
0
Shares
Related Posts