2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம் நாட்டையே உலுக்கியது. தற்போது அதையே மிஞ்சும் அளவுக்கு மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவுபணியில் இருந்திருக்கிறார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து மருத்துவமனையில் பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். கொலை செய்ததை மறைக்க வேண்டுமென தான் அணிந்திருந்த உடையை சுத்தம் செய்துன் காலனியில் இருந்த ரத்தகரை காட்டிக் கொடுத்துவிவே காவல்துறை கைது செய்துள்ளது. சஞ்சய் ராய் செல்போனை ஆய்வு செய்ததில் ஆபாச படங்களே அதிகமாக இருப்பதாகவும், அவர் ஒரு womaniser – பெண்கள் மீதான கொடுமைகளை நிகழ்தக்கூடியவர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக படுகொலை செய்யப்பட்ட மானவியில் சடலம் கல்லூரிக்குள் இருந்தும் ஏன் அந்த கல்லூரி முதல்வர் புகார் அளிக்காமல் இருந்தார்? கல்லூரி முதல்வர் சந்திப் கோஷ், மாணவி மரணம் விவகாரம் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்துவிட்டு, கொல்கத்தா தேசிய மருத்துவமனையின் முதலவராக அறிவிக்கப்பட்டது எப்படி?
இவ்விவகாரத்தில் 150ml அளவுக்கு உயிரணு கிடைத்திருப்பதை உறுதி செய்துள்ளது மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகள். சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு முறை உடலுறவு கொண்டால் 10-15ml அளவுக்கு தான் உயிரணு வெளியேறும், அப்படியால் இது கூட்டு பாலியல் வன்புணர்வாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுவதுதான் உண்மையா?
மேலும் அந்த அறிக்கையில், கண்கள் மற்றும் வாய் இரண்டிலிருந்தும் ரத்தம் கசிந்திருக்கிறது. முகத்தில் காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்புகளிலும் ரத்தம் வழிந்துள்ளது. வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் உதடுகளில் காயங்கள் உள்ளன. அப்படியானால் கொன்றுவிட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதா?
யாரை காப்பாற்ற இந்த விவாகரத்தை மூடி மறைக்க முயற்சித்துள்ளது நிர்வாகம்? என்று பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் மருத்துவரின் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 5 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி சிவஞானம்,நீதிபதி ஹிரண்மயி பட்டாச்சார்யா அமர்வு முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், சிட்பண்ட் முறைகேடு வழக்கில் அப்போதைய காவல் ஆணையரே முக்கிய ஆதாரங்களை அழித்தார். பெண் மருத்துவர் விவகாரத்திலும் ஆதாரங்களை அழிக்க போலீஸார் முயற்சி செய்யக்கூடும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட, இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, மேற்குவங்க போலீஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை.கொலை நடந்து 5 நாட்கள் ஆகியும் போலீஸாரால் முழுமையான விவரங்களை வழங்க முடியவில்லை. வழக்கின் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது என்று உத்தரவிட்டிருக்கிறார். வருகிட்ற 18-ஆம் தேதிக்குள் வழக்கை முடித்து காட்டுவார்கள் என்று மம்தா பேனர்ஜி கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே CBI-க்கு வழக்கு மாற்றப்பட்டு அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.ஜி.கற் மருத்துவமனையை சேர்ந்த சக மாணவர்கள், போலீசார் விசாரணையை முடிக்க சொல்லி இன்று கெடு விதித்துள்ளனர். மேலும் “சுதந்திர தின நள்ளிரவில்” என்ற பெயரில் பெண் மருத்துவர்கள் மேற்கு வங்கத்தில் இரவு பேரணியை தொடங்கவுள்ளனர். மேற்கு வங்கத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேற்சொன்ன கேள்விகளுக்கு ஆம் என்ற விடை கிடைத்துவிட்டால், இந்திய மக்களின் நெஞ்சங்களை உறைய வைத்த நிர்பயா வழக்கை விட கொடூரமான வழக்காக இது பதிவு செய்யப்படும். இந்தியாவின் இறையான்மை கேள்விக்குள்ளாக்கபடும் என்று அச்சமூட்டுகிறார்கள் விபரமறிந்தவர்கள்.