டெல்லியைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் அமிதா பிரஜாபதி . பட்டய கணக்காளர் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைத்து வந்த அமிதா தற்போது பட்டய கணக்காளர் (CA) தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
Also Read : பெண்ணின் தலையில் இருந்த 77 ஊசிகள் – அதிர்ந்துபோன மருத்துவர்கள்..!!
குடிசையில் வசித்து வரும் இவர்களின் குடும்பம் வறுமையின் பிடியில் அகப்பட்டிருந்தபோதும் தனது விடாமுயற்சியால் அனைத்தையும் தகர்த்து எறிந்து அமிதா சாதித்து காட்டியுள்ளார் .
‘நான் என் வாழ்க்கையில் முதல்முறையாக என் அப்பாவை கட்டியணைக்கிறேன். 10 ஆண்டுகால முயற்சி
எனது பல நாள் கனவு நிறைவேறிவிட்டது. இப்போது நிம்மதியாக உள்ளது’ என அமிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார்