தெலங்கானாவில் ஓடும் அரசு பேருந்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் பெண் நடத்துநர் பிரசவம் பார்த்து தாயையும் குழந்தையும் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா அரசுப் பேருந்தில் பயணித்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது மருத்துவமனை செல்வதற்குள் குழந்தை பிறக்கும் நிலையில் இருந்ததால் சாமர்த்தியமாக செயல்பட்ட பெண் நடத்துநர் . பயணிகள் அனைவரையும் கீழே இறங்க சொல்லி ஒரு சில பெண்களை மட்டும் உதவிக்கு வைத்துக்கொண்டு அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளார் .
Also Read : தங்கலான் படத்தின் “மினிக்கி..மினிக்கி” வீடியோ பாடல் வெளியானது..!!
பெண் நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணித்த செவிலியர் மற்றும் ஒரு சில பெண்கள் இணைந்து பிரசவம் பார்த்ததில் அவர்களுக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது
ரக்ஷா பந்தனை ஒட்டி தனது சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக பேருந்தில் சென்ற போது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் அந்த பெண்மணி .
பேருந்தை உடனடியாக நிறுத்தி இரு உயிர்களை காப்பாற்ற உதவிய நடத்துனர் பாரதிக்கு தற்போது பாராட்டுகள் குவிகின்றன.