Site icon ITamilTv

இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற இளம் பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு..!!

young insta woman

young insta woman

Spread the love

மகாராஷ்டிராவில் ரீல்ஸ் எடுக்க முயன்ற அன்வி காம்தர் என்ற இளம் இன்ஸ்டா பிரபலம் 300 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள கும்பே அருவிக்கு அன்வி காம்தர் என்ற இன்ஸ்டா பிரபலம் சுற்றுலா சென்றுள்ளார் . பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

Also Read : ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர் – 13 இந்தியர்கள் உட்பட 16 மாயம்..!!

இந்நிலையில் வழக்கம் போல் சம்பவத்தன்று 27 வயதான அன்வி காம்தர் ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து பள்ளத்தில் விழுந்த அன்வியை 6 மணி நேரம் போராடி பலத்த காயங்களுடன் பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். இருப்பினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது .

இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்ற 27 வயதே ஆன இளம் பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version