விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளரான ஆயிஷா குறித்து அவரது முன்னாள் காதலன் தேவ் என்பவர் பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
நடிகையாக சீரியல்களில் நடித்து வரும் ஆயிஷா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.கடந்த வாரம் கூட கமல் தன்னை தவறாக சித்தரிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார் ஆயிஷா. இந்நிலையில் ஆயிஷாவின் முன்னாள் காதலன் தேவ் என்பவர் அவரைப் பற்றி பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில் ஆயிஷாவுக்கு பதினாறு வயது இருக்கும் போதே அவரது வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர் இதை எடுத்து 18 வயதில் ஆயிஷாவிற்கு இரண்டாவது திருமணம் நடந்தது.அதன் பின்னர்தான் கேரளாவில் இருந்து சென்னைக்கு ஆயிஷா படிக்க வந்தார் என்று அவருடைய முன்னாள் காதலன் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த பிறகு தனக்கும் ஆயிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் காதலித்ததாகவும் கல்யாணம் பற்றி பேச அவரது குடும்பத்தினரை சந்திக்க கேரளாவுக்கு சென்றதாகவும் அங்கு இவர்களது காரணத்திற்கு காதலருக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தன்னை அடித்து டார்ச்சர் செய்ததாகவும் அந்த எதிர்ப்பையும் மீறி தான் காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார்.