தனியார் பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சியில் 8 வயதே ஆன 3 வகுப்பு படித்து மாணவி கண்ணை மூடி கொண்டு கூறும் நிறங்கள் உள்ள பானைகளை சிலம்பம் மூலம் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.மேலும் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கும் படி குழந்தை கேட்டு கொண்டு உள்ளது.
சென்னை, அண்ணாநகரில் உள்ள சி.எஸ்.ஐ ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 8 வயதே ஆன M.வர்ஷினி ஸ்ரீ உலக சாதனை நிகழ்த்தினார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் அவர் நமது பாரம்பரிய கலைகளான சிலம்பம் மற்றும் தியானக்கலையின் துரோணா மூன்றாவது கண் விழிப்புணர்வு பயிற்சியின் மூலம் தனது இரு கண்களையும் துணியால் கட்டிய நிலையில்,
மனதால் பார்த்து, பல்வேறு நிறங்களை துல்லியமாக சிலம்பக்கம் பின் சுழற்சி மூலம் தொட்டு, தொடந்து சிலம்பம் விளையாடி உலக சாதனை புரிந்தார்.இந்த நிகழ்வு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் முறைப்படி பதிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக சி.எஸ்.ஐ ஜெஸ்ஸி மோசிஸ் பள்ளியின் முதல்வர் விமலா ஆஞ்சலினா, துரோணா மூன்றாவது கண்பயிற்சி நிறுவனர் அருள்முகன், இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் -ன் தேசிய தலைவர் டாக்டர்.சாதாம் உசேன், மாநிலத்தலைவர் ஆண்டனி,
யுனைடெட் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் நிறுவனர் சத்தியராஜ் ஆசான், தமிழ்நாடு போல்ரிங் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. செந்தில்நாதன், தமிழ்நாடு ஆஸ்டெடு அகாடா சங்கத்தின் பொதுச்செயலாளர் புவனேஸ்வரி ஆகியோர் உலக சாதனை படைத்த M.வர்ஷினி ஸ்ரீ அவர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் அணிவித்தனர்.
ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிலம்ப ஆசான் G.R.முத்துகுமார் மற்றும் மாஸ்டர் S.தீபா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.