தமிழகத்தில் 36 மணிநேரத்தில் மொத்தம் 2,512 ரவுடிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும், நன்னடத்தைக்காக ஜாமீன் பெறப்பட்டு 1,927 ரவுடிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்த அவர், சிறைக்கு அனுப்பப்பட்டவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 கத்தி, அரிவாள்கள் உள்ளவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிப்படியாக குற்றங்களை குறைக்க ரவுடிகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்றும், அதன் முதல் நடவடிக்கையாக தற்போது 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று காவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் காவல்துறை பொதுமக்களின் நண்பனாக நிச்சயம் செயல்படும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.