புஷ்பா 2 ரிலீஸின்போது ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இந்த வழக்கில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனின் தனிப் பாதுகாவலர் ஆண்டனி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான அன்று முதல் காட்சியைக் காண திரையரங்கம் சென்ற அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி ரேவதி என்பவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் தெலங்கானாவில் வைத்து நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்த நிலையில் கைதான சில மணி நேரத்திலேயே அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
கடந்த 4 ஆம் தேதி நடந்த இந்த துரதிஷ்டவசமாக சம்பவத்தில் தாய் உயிரிழந்த நிலையில் சிறுவன் ஸ்ரீதேஜ் காயமடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார் .
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஸ்ரீ தேஜும் மூளைச் சாவு கடந்த 18 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
இன்னலையில் போலீசார் நடிகர் அல்லு அருஜுனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பிய நிலையில் இன்று தெலுங்கானாவில் உள்ள காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஆஜரானார் அவரிடம் 3 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க புஷ்பா 2 பட ரிலீஸ் அன்று அல்லு அர்ஜுனைக் காண சந்தியா திரையரங்கில் கூடிய ரசிகர்களை தள்ளிவிட்டதாக நடிகர் அல்லு அர்ஜுனின் தனிப் பாதுகாவலர் ஆண்டனி மீது புகார் எழுந்த நிலையில் தற்போது அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.