கேரளாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றான வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில்பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் நிதியுதவி வழங்கியுள்ளார் .
கேரள மாநிலம் வயநாடு அருகே கடந்த மாதம் 30ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள 6 கிராமங்கள் தடம் தெரியாமல் காணாமல் போனது .
சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் வயநாடு மற்றும் அதனை சுற்றி இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 1000 கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்தும் பலர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
Also Read : புதிய நவீன ருவாண்டாவை கட்டமைப்போம் – பால் ககாமே சூளுரை…!!
கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்ப்பட்ட இந்த துயர சம்பவத்தில் 400கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . மேலும் இந்த துயர சம்பவத்தில் உறவுகளை , வீடுகளை இழந்த பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வயநாடு அருகே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் தனுஷ் நிதியுதவி வழங்கியுள்ளார் .
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு உதவ கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் தனுஷ் தனது சொந்த பணத்தில் இருந்து 24 லட்சம் ருபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.