நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
NAYANTHARA – BEYOND THE FAIRY TALE என்ற நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படம் தொடர்பான காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக நடிகை நயன்தாரா மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
உரிய அனுமதி இன்றி படத்தில் காட்சிகளை பயன்படுத்தியதாக வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் தற்போது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Also Read : டிச.15-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!
இதையடுத்து இந்த வழக்கு குறித்து நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதால் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பில் எந்த மாதிரியான விளக்கம் வரப்போகிறது என்பதை பார்க்க அனைவரும் ஆவலாக உள்ளனர்.