ITamilTv

இன்று மாலை வெளியாகும் வாத்தி திரைப்படத்தின் டிரைலர்.. படக்குழு அறிவிப்பு!

Spread the love

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி (vaathi) திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5:04க்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘வாத்தி’ (vaathi) திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில், சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

vaathi

இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி வாத்தி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் தனுஷ் மற்றும் பாரதிராஜா பேசிய காட்சிகள் வைரல் ஆனது.

இதனையடுத்து, தற்போது வாத்தி திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 05.04க்கு வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும், ஒரே நாளில் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படமும் மற்றும் தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடித்துள்ள ‘பகாசூரன்’ திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Spread the love
Exit mobile version