Site icon ITamilTv

மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரி நடிகர் ஜெயம் ரவி மனு..!!

Jayam Ravi

Jayam Ravi

Spread the love

நடிகர் ஜெயம் ரவி தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல சூப்பர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும் இவரது நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில் உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

இந்நிலையில் தனது காதல் மனைவி ஆர்த்தி உடனான 15 ஆன்டு கால திருமண உறவை முறித்துக்கொள்வதாக நடிகர் ஜெயம் ரவி நேற்று அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

Also Read : வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமானார்..!!

ஜெயம் ரவியின் இந்த அறிவிப்பால் திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் உள்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்துக் கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பதிவான திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில் இந்த வழக்கு அக்.10 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version