ITamilTv

விஸ்வரூபம் எடுக்கும் த்ரிஷா விவகாரம் : முன்ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு..!!

Spread the love

தமிழ் திரையுலகில் தற்போது த்ரிஷா மற்றும் மன்சூர் அலிகான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த லியோ திரைப்படத்தில் எனக்கும் த்ரிஷாவுக்கும் பாலியல் தொந்தரவு செய்யும் காட்சியே இல்லை என நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் நடிகை த்ரிஷா உள்பட திரை பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதற்கிடையில் சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் இச்சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்ததுடன் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது . இந்த விசாரணையில் அவர் கைது செய்யப்படலாம் என்பதால் இன்று முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.


Spread the love
Exit mobile version