பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார்.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த புனித்குமார், பெட்டாடா ஹூவு என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
பின்னர் புரி ஜெகநாத் இயக்கிய ’அப்பு’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
தற்போது ‘ஜேம்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புனித் ராஜ்குமாருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் உடனடியாகச் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மாரடைப்பால் புனித் ராஜ்குமார் உயிரிழந்தது கன்னட ரசிகர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.