சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் படத்தின் அட்டகாச வெற்றிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : அமைச்சரவையில் உதயநிதிக்கு 3 வது இடம் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை 6 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற இருப்பதாகவும்
சாதாரண பரிசோதனைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல் தெரிவிதித்துள்ளார்.