மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் உறுப்புகள் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாம். இதனைத்தொடர்ந்து, ரஜினிக்கு நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ளா நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுவரை ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.
முன்னதாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.