இணையத்தை கலக்கும் பிக் பாஸ் ராஜுவின் திருமண புகைப்படங்கள்..! க்யூட் போட்டோஸ் இதோ…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் அமோக ஆதரவை பெற்றது மட்டுமல்லாமல் பிக்பாஸ் டைட்டிலையும் ரூ. 50 லட்சம் பரிசு தொகையையும் தட்டிச் சென்றவர் தான் ராஜு.

கதைகள் எழுதுவதிலும் அதை சுவாரஸ்யமாக சொல்வதிலும் அதீத ஆர்வம் கொண்ட ராஜு சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் சில வருடங்களுக்கு முன் வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு வந்து இயக்குனர் பாக்யராஜ் அவர்ளின் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் கலக்கி வந்த ராஜுவுக்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது .

அந்த நிகழ்ச்சியில் தனது முழு திறமையையும் காட்டி மக்களின் மனதை வென்ற ராஜு பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார்.

இந்நிலையில் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிஸியாக இருந்து வரும் ராஜுவின் திருமண புகைப்படம் மற்றும் ராஜுவின் மனைவி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜோடி செம சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த க்யூட் போட்டோஸ்…

Total
0
Shares
Related Posts