வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி அமரன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அரசியல் த்ரில்லர் படமான சுரேஷ் காமாட்சியின வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.